நீதி எங்கே ?
எங்கு தேடினாலும் இன்றைய நிலையில் நீதி கிடைக்க வழியில்லாமல் ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளனர்
தினகரன் அலுவலக தாக்குதல் - 09 மே 2007
சட்டகல்லூரி மாணவர்கள் மோதல் - 2008
உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறைக்கும் இடையிலான மோதல் - 2009
மேற்கண்ட இந்த குறிப்பிடும்படியான மிருகத்தாக்குதல்களில் காவல்துறைக்கு வேடிக்கைப்பார்க்கும் வேலையைத்தவிற வேறேதும் செய்யக்கட்டளையிடப்படவில்லை
தினகரன் அலுவலக தாக்குதலுக்கு காரணமாக இருந்த "தமிழகத்தின் அடுத்த முதல்வர்" கருத்துக்கணிப்பு முடிவுகள். மூன்று இளைஞர்களின் உயிரால் பசியாரிய ரௌடிகளின் தாக்குதலுக்கு பிறகு, தயாநிதியின் ராஜினாமா, கலைஞர் டி.வி உதயம், இரு குடும்பங்களின் பிரிவு என நிகழ்ந்த நாடகங்கள் தலைவரின் இதயம் இனித்து, கண்கள் பனித்து மீண்டும் கூட்டுக்களவானிகளாக சேர்ந்தனர்
தங்கள் சுயலாபத்திற்காகவும், குடும்ப நலனுக்காகவும் இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒரு "இந்திய ராஜபக்ஷே"வாகவே செயல்பட்டார் நமது முதல்வர். இலங்கையிலிருந்து எவன் வாக்களிக்கபோகிறான் என எண்ணி இப்படி சும்மா இருந்தாரோ என்னவோ....????. மிக சிறந்த வசனகர்த்தா என ஏற்கனவே நிரூபித்த முதல்வர் காலை சிற்றுண்டிக்கு பிறகு மதிய உணவிற்க்கு முன்பு வரையில், உலகின் மிகச்சிறிய உண்ணாவிரதத்தின் மூலம் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதையும் நிரூபித்தார்
பழைய தவறுகள் அனைத்தையும் நாம் மறக்கும் அளவுக்கு இவர்கள் நாளுக்குநாள் பெரிய கொடுமைகளை புரிந்து வருகின்றனர். மேற்கண்டதைப்போன்ற பாவச்செயல்களை இன்னும் மறவாமல் இருக்கிறோம் என்பதை நாம் அனைவருக்கும் உணர்த்த வேண்டும்
சிந்தியுங்கள்
தமிழன்,
No comments:
Post a Comment