Thursday, December 30, 2010

என் எண்ணங்கள் நட்பு, தைரியம், உண்மை, மற்றும் நம்பிக்கைக்கு இல்லாத எல்லை பொறுமைக்கு உண்டு


நீதி எங்கே ?

பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், மணல் கொள்ளை, அரிசி கடத்தல், மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் மற்றும் இதர ஊழல்கள் என பெருகிக்கிடக்கும் சாதனைகளில் அனைவரும் மறந்துவிட்ட மிகமுக்கியமான ஒன்று சட்டஒழுங்கில் சீர்கேடு

எங்கு தேடினாலும் இன்றைய நிலையில் நீதி கிடைக்க வழியில்லாமல் ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளனர்

தினகரன் அலுவலக தாக்குதல் - 09 மே 2007



சட்டகல்லூரி மாணவர்கள் மோதல் - 2008


உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறைக்கும் இடையிலான மோதல் - 2009



மேற்கண்ட இந்த குறிப்பிடும்படியான மிருகத்தாக்குதல்களில் காவல்துறைக்கு வேடிக்கைப்பார்க்கும் வேலையைத்தவிற வேறேதும் செய்யக்கட்டளையிடப்படவில்லை

தினகரன் அலுவலக தாக்குதலுக்கு காரணமாக இருந்த "தமிழகத்தின் அடுத்த முதல்வர்" கருத்துக்கணிப்பு முடிவுகள். மூன்று இளைஞர்களின் உயிரால் பசியாரிய ரௌடிகளின் தாக்குதலுக்கு பிறகு, தயாநிதியின் ராஜினாமா, கலைஞர் டி.வி உதயம், இரு குடும்பங்களின் பிரிவு என நிகழ்ந்த நாடகங்கள் தலைவரின் இதயம் இனித்து, கண்கள் பனித்து மீண்டும் கூட்டுக்களவானிகளாக சேர்ந்தனர்



தங்கள் சுயலாபத்திற்காகவும், குடும்ப நலனுக்காகவும் இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒரு "இந்திய ராஜபக்ஷே"வாகவே செயல்பட்டார் நமது முதல்வர். இலங்கையிலிருந்து எவன் வாக்களிக்கபோகிறான் என எண்ணி இப்படி சும்மா இருந்தாரோ என்னவோ....????. மிக சிறந்த வசனகர்த்தா என ஏற்கனவே நிரூபித்த முதல்வர் காலை சிற்றுண்டிக்கு பிறகு மதிய உணவிற்க்கு முன்பு வரையில், உலகின் மிகச்சிறிய உண்ணாவிரதத்தின் மூலம் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதையும் நிரூபித்தார்

பழைய தவறுகள் அனைத்தையும் நாம் மறக்கும் அளவுக்கு இவர்கள் நாளுக்குநாள் பெரிய கொடுமைகளை புரிந்து வருகின்றனர். மேற்கண்டதைப்போன்ற பாவச்செயல்களை இன்னும் மறவாமல் இருக்கிறோம் என்பதை நாம் அனைவருக்கும் உணர்த்த வேண்டும்

சிந்தியுங்கள்


தமிழன்,

வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்



சினிமாவில் வசனம் எழுதி தன் ஆரம்பகாலத்தை துவங்கிய திரு மு.க.மிகவும் சாதுர்யம் மிக்கவர். நான்கு நியதிகளை அவர் நன்கு புரிந்துகொண்டார்.


1.தமிழ் நாட்டில் புகைந்து கொண்டிருந்த பார்ப்பன துவேஷம்.இதை திரு.ஈ.வே.ரா பயன் படுத்த தொடங்கிய தருணம்.இதில் உள்ள potential ஐ, இதை போர்வையாக பயன் படுத்தினால்,இமயமலையை கூட மறைத்து விடலாம் எனும் உண்மையை மு.க புரிந்துகொண்டார்.


2.செய்வதை விட பேசுவதே அதிக பலன் தரும் எனவும் புரிந்துகொண்டார்.எனவே நல்லதையே பேசி கெடுதலையே செய்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் எனவும் அறிந்து கொண்டார்.


3 மனித மனதில் அன்பை வளர்ப்பதை விட துவேஷத்தை வளர்ப்பது லகுவானது; பிரித்தாளுவது மிகவும் சிறந்த முறை என்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து கற்று கொண்டார்.


4. பணத்தால் வாங்க முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.


இவ்வளவுக்கும் மேல் கடவுள் அருள் அவருக்கு பரிபூரணமாக இருந்தது.


1.அண்ணாவின் அகால மறைவு


2. இந்திரா காங்கிரசின் தோற்றம்


3.காமராஜின் மறைவு


4.MGR இன் தான் மலையாளி என்கிற அநாவசியமான தாழ்வு மனப்பான்மை


5.MGR இன் மறைவு


6.Jaya வின் முதிர்ச்சியற்ற,அகம்பாவம் நிறைந்த மனோபாங்கு(நினைத்து பாருங்கள்... மு.க, சோனியாவிற்கும் நண்பர்,அத்வானிக்கும் நண்பர். ஜெயா இருவருக்கும் எதிரி!!)


7.இரண்டு முறை கிடைத்த ஆட்சி பொறுப்பை ஜெயா முழுவதும் வீணடித்து மக்கள் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டது.


அப்போ நம்ம இக்கட்டு எல்லாம் எப்போ விலகும்?


அவருக்கு எப்போ டிக்கட் கிடைக்குதோ அப்போதான்!!




தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி


கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.


*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

 இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.


பக்கம் 81,82 ல்..............
* விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.


இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.


பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.


இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30. அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40. முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44. முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties  after semmuzi   coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra  extra


இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும் , தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.


வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்

Thursday, December 16, 2010






ஓ மை காட்..! – கதை, திரைகதை, வசனம் – மு.கருணாநிதி

நானும் எத்தனையோ கதைகளை கேட்டுருக்கேன். ஆனால் இதுபோல ஒரு கதை இதுவரை கேட்டதில்லை, கேட்கவும் முடியாது. முழு உலகத்தையும் சோற்றில் மறைக்கும் கற்பனை முயற்சி. இதை படித்தவுடன் உங்களுக்கு கண்ணை கட்டலாம், மயக்கம் வரலாம், தற்கொலை எண்ணம் கூட வரலாம். இதயம் பலவீனமானவர்கள் இதை படிக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். தினமலரில் நேற்று வந்த கதை . இணையத்தில் நான் படித்ததிலேயே இந்த தினமலர் கட்டுரைக்கு வந்த பின்னூட்டம் தான் கிளாஸ் என்பேன்.
——————–தினமலர்——————–சென்னை : “கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கவில்லை’ என, முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஜெயலலிதா துவங்கி அ.தி.மு.க., தொண்டர்கள் வரையிலும், சில கட்சிகளின் நண்பர்கள் சிலரும், நான் ஏதோ சல்லிக்காசு கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும், இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும், என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்களையும் வாங்கிக் குவித்திருப்தைப் போலவும் பேசி வருகிறார்கள்; எழுதி வருகிறார்கள். நான் சிறு பருவத்திலே இருந்தபோதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது. கடந்த 1949ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளர் பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு ராபின்சன் பூங்காவில் தி.மு.க., துவக்கப்பட்ட போது அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு வந்த போது, விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன்.
என், “மந்திரிகுமாரி’ நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது, எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் துவங்கியது. அப்போது சேலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன் என்னைச் சந்தித்து அவருடைய “மணமகள்’ திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டும் என கேட்டார்; ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன். அதுபோலவே, “இருவர் உள்ளம்’ திரைப்படத்திற்காக வசனம் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடியதால், தயாரிப்பளர் எல்.வி.பிரசாத் என் வீட்டிற்கு வந்து முதலில் கொடுத்த 10 ஆயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் 10 ஆயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார். நான் அந்தக் தொகையைக் கொண்டு திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய்சேய் நல விடுதி கட்டி, அதை அன்றைய முதல்வர் பக்தவத்சலத்தை அழைத்துச் சென்று திறந்து வைத்தேன்.
அந்தக் காலகட்டத்தில் சென்னை தி.நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள், கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே 5,000 ரூபாய் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்கு மேல் தேவையான பணத்தைத் தானே போட்டு, எனக்கு ஒரு கார் வாங்கித் தந்தார். அந்த காரில் என்னை உட்கார வைத்து கலைவாணரே ஸ்டூடியோவிற்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை, வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். பொதுப்பணித்துறை அமைச்சராகவும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன். எல்லா முதல்வர்களின் வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலே தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை, வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர். இந்த வீடு கூட நான் அமைச்சராவதற்கு முன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடு தான்.
நான் இத்தனை பொறுப்புகளையும் என் 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும், சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக் கொண்டதும் இல்லை. இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது வைப்பு நிதியாக ஐந்து கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும், சேமிப்பு கணக்கில் 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ஆயிரம் ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது. நான் வசிக்கிற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுத்துள்ளேன். இந்த வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கவில்லை. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் விஷயத்தில் என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு நெருப்பு மாதிரி.
நான் முதல் முறையாக முதல்வராக இருந்த போது, தஞ்சாவூர் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வக்கீல் தவறு செய்த போது அவர் மீது நடவடிக்கை எடுத்தேன். என் வாழ்க்கை திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கவும், என் மீது இன்னும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணுடையோர் காண்பதற்காக. முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
—————–நான் ரசித்த பின்னூட்டம்————————————-
ஷம்கீன் துபாய் – துபாய்,ஐக்கிய அரபு நாடுகள் 2010-12-02 03:09:18 IST
சரி….. நீங்க சொன்னத நாங்க ஏத்துகிட்டோம்….அதே மாதிரி நாங்க சத்தியமா உங்களுக்கு இனிமே ஓட்டு போடவே மாட்டோம்….இத நீங்க ஏத்துக்கிடனும்……..இந்த கோட்ட தாண்டி நீங்களும் வரக்கூடாது……. நாங்களும் வர மாட்டோம்….பேச்சு பேச்சாவே இருக்கணும்…….
செல்வம் – chennai,இந்தியா 2010-12-02 02:23:30 IST
கே.ராஜசேகரன் – chennai,இந்தியா உங்களின் கருத்து அருமையோ அருமை…..(கருணாநிதியின் குடும்பத்தில் யாருக்கும் எந்த சொத்தும் கிடையாது.கருணாநிதி ஹை கோர்ட் வக்கீலிடம் குமாஸ்தாவாக இருக்கிறார்.அழகிரி மதுரையில் கூலி வேலை செய்கிறார்.ஸ்டாலின் சென்னையில் மீன்பாடி வண்டி ஓட்டுகிறார்.கனிமொழி துணி கடையில் வேலை செய்கிறார்.மாறன் சகோதரர்கள் வேலையில்லாமல் ஊரை சுற்றுகிறார்கள்.மற்ற பேரன்கள் பஸ் ஸ்டாண்டில் பிச்சையெடுத்து கொண்டு இருக்கிறார்கள்.தயவுசெய்து அனைவரும் நம்புங்கள்.இல்லாவிட்டால் சிங்கப்பூர் ஜோபெட்க்கு கோபம் வந்து ஜெயலலிதாவை தரக்குறைவாக திட்ட ஆரம்பித்து விடுவார்…. )உங்களின் கருத்து போல் தன்னுடைய குடும்ப உறுபினர்களை பற்றி கருணாநிதியே இன்னும் கொஞ்ச நாளில் இப்படி சொன்னாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை….. தன்னுடைய கடைசி காலத்திலும் மக்களை ஏமாற்றி பிழைக்க பார்க்கிறார் கருணாநிதி…
சந்தோஷ்.g – vellore,இந்தியா 2010-12-02 02:05:40 IST
அய்யா உங்கள் சொத்து மதிப்பை கேட்டால் ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி, மூன்று லட்சம் கோடி ரூபாய் என்று பெருமையாக சொல்லுங்கள், நீங்கள் என்னோட சொத்து இரண்டு கோடி ரூபாய் என்று கூரியுள்ளீரே, உங்களுக்கு அன்றாடம் சமைத்து போடும் சமையல் காரன் கைப்புள்ள சொத்து இரண்டு கோடி ரூபாய் இருக்கும். வந்த இரண்டு மாதத்தில் கைப்புள்ள உங்களுக்கு சமைத்து போட்டு இரண்டு கோடி ரூபாய் சொத்து சேர்த்துவிட்டார். நீங்கள் கொள்ளையடித்து ஆசியாவிலே பணக்கரார், உலகத்திலேயே பணக்கரார் இடத்தை பிடிக்கபோகிரீர் என்று நாங்கள் எல்லாம் பெருமை பட்டோம், ஆனால் நீங்கள் என் சொத்து இது தான் என்று வாய் கூசாமல் பொய் கூறுகிறீரே? நியாயமா? அய்யா ஒரு வேண்டுகோள், எனக்கும் கைப்புள்ள மாதிரி கோடி ரூபாய் பார்க்கவேண்டும், எத்தனை காலத்திற்கு லட்சத்தில் சம்பாதிப்பது, உங்கள் கொள்ளு பேரனுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து நானும் இரண்டு மாதத்தில் இரண்டு கோடி சம்பாதிக்க வேண்டும், தயவு செய்து என்னை வாத்தியாராக உங்கள் கொள்ளு பேரனுக்கு நியமியுங்கள்….
முரளி – vienna,யூ.எஸ்.ஏ 2010-12-02 01:55:38 IST
Yesterday, I saw Mr.Karunanidhi was standing in the ration queue to buy One KG One Rs rice and oil for his family(s). He is poor enough to get the monthly old age pension from the government. Very honest fellow. From now on, Mr.Karunanidhi should be fondly called as “Fire Karunanidhi”. (Please don’t read this as to fire Karunandhi from his post). He never got any ill gotten wealth. He never accepted any bribe from anybody. His family members are very honest too. His daughter KaniMozhi’s ECR property belongs to Somebody. They are struggling with hand to mouth. May GoD bless them to make some money through their legal ventures….
கே.கைப்புள்ள – nj,இந்தியா 2010-12-02 01:34:01 IST
எல்லோரும் நல்லா கேட்டுகோங்கப்பா, இவரோட வாழ்க்கை தொறந்த புத்தகமாம்பா. இந்த புத்தகத்த உலக நூலகத்துலதான் வெக்கணும். பின்னாடி வரும் சந்ததிங்க எல்லாம் பாத்து படிச்சு பயன்பெறுவாங்க. ஆமா அது என்ன புத்தகம்? புத்தகத்தோட தலைப்பு என்ன? விஞ்ஞான முறையில் ஊழல் செய்வது எப்படி? மக்களை கிறுக்கு பிடிக்கும் படி பேசி குழப்புவது எப்படி? மக்களை திசை திருப்பி குழப்பி முட்டாளாக்கி ஓட்டு வாங்கி ஜெயிப்பது எப்படி? குடும்பத்துக்கும் சொந்தபந்தங்களுக்கும் சொத்து சேர்ப்பது எப்படி? சொம்படிச்சான் குஞ்சுகளை ஏமாற்றி பேசி தனது குடும்ப நலனுக்கு சொம்படிக்க வைப்பது எப்படி? இப்படி பல புத்தகம். எல்லாமே தொரந்துதான் கெடக்கு. ஆனா நமக்கெல்லாம் ஒன்னும் தெரியாது. அந்த புத்தகத்தை எல்லாம் அவரோட குடும்ப உறுப்பினர்கள்தான் படிக்க முடியும். மத்தவங்களுக்கு வெறும் அட்டைதான் கண்ணுக்கு தெரியும். இந்த புத்தகத்த காயலான் கடைல போட்டா அவன் கூட கெட்டு போய்டுவான்….
கே.கைப்புள்ள – nj,இந்தியா 2010-12-02 01:11:15 IST
நான் இத படிக்க உடனே இங்கிலீஷ்காரன் வடிவேல் காமடி பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திடிச்சு. தீப்பொறி திருமுகம் வந்துதான்யா இந்த கற்பூரத்த பத்த வெக்கணும். பாஸ் நீங்க நடந்தா நெருப்பு பறக்குது, அருவாள எடுத்தா அனல் பறக்குது, எப்படி பாஸ்? எல்லாமே ஒரு பில்ட் அப். பாஸ் இவ்வளவு கேவலமான பில்ட் அப் தேவையா பாஸ்? பில்ட் அப் பன்றன்னோ, பீலா விடுறனோ அது நமக்கு தேவை இல்ல. நாம எது பண்ணினாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்து பாக்கணும். நாதாரி தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும். ஆனா நாம பண்றது நாலு பேருக்கு புரியபடாது, தெரியபடாது, இல்லேனா ஒரே வீட்ல 15 வருசமா இருந்துக்கிட்டு ஏமாத்திக்கிட்டு தின்னுகிட்டு வாழ முடியுமா? அவ்வளவுக்கும் கிரெய்ன்டா கிரெய்ன். பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ். என்னோட மூஞ்சிக்கு முன்னாடி புகலாத… எனக்கு புடிக்காது. பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ். புடு… புடு… புடு… புடு… புடு… நீங்களும் வேணா இந்த காமடிய பாத்து சிரிங்க. youtube englishkaaran comedy. செம ஜாலியா இருக்கும்….
மேலும் விழுந்து விழுந்து சிரிக்கhttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=137638நன்றி : தினமலர்

Wednesday, December 15, 2010

TN Assembly polls: Vijaykant ready for alliance

Kancheepuram: In a shift in his stand, DMDK chief Vijaykant has expressed his willingness to lead an alliance excluding the ruling DMK and opposition AIADMK in the Tamil Nadu Assembly polls next year.
"People have lost confidence in both the DMK and AIADMK, which have ruled the state alternately in the last over five decades. They prefer a change. We will be able to fulfil their expectations," he told his party cadres at Mamandur near here. It is the first time since founding the party in 2005 that the actor-turned politician has indicated his willingness to forge an alliance to contest elections.
Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) has played spoilsport to both principal Dravidian parties DMK and AIADMK, cutting into their vote banks in the last assembly and Lok Sabha polls -- though Vijaykant alone managed to emerge success by winning the Vridhachalam assembly segment in 2006.
How Madras Day became Madras Week
But, the 'Captain', as Vijaykant is known, made it clear that he wants to lead from the front.
"There will be an alliance led by DMDK for the assembly elections," he said yesterday after inaugurating a community hall. The details of the alliance would be worked out at the outset of the election.
Vijaykant said his party believed in 'forgive and forget' principle, and this would be the spirit in which the new alliance would be formed. His remarks assume significance as PMK leader S Ramadoss, a vocal critic of Vijaykant, has recently said he was not averse to a tie-up with the DMDK.
Vijaykant dismissed the free pump-set scheme announced by Chief Minister M Karunanidhi recently as a "vote catching gimmick", saying these can be of no use to farmers who were facing power cuts.

Tuesday, December 7, 2010

LKSUDHISH - LKS -SUDHISHLK - Captain Tv Logo Release

VIJAYKANTH SPEECH 1

vijayakanth speech

http://www.youtube.com/watch?v=aI9G-orGK8E

DMDK Campaigns for Lok Sabha Elections 2009

The 15th Lok Sabha has to be constituted before 2nd June 2009.
Fifteenth  Lok Sabha 2009 Elections has been announced and the elections will be conducted in five phaes. The five phases of the election dates are as  April 16 2009 , April 23, 2009, April 30, 2009, May 7, 2009 and  May 13, 2009.
In Tamil Nadu, the Elections will be conducted in 5th Phase i.e May 13, 2009.
Out of the 543 seats 84 seats have been reserved for Scheduled Castes and 47 seats reserved for Scheduled Tribes.
In Tamil Nadu there are Two Major parties contesting with alliances, where as the third party DMDK is contesting the Lok Sabha elections for the first time without any alliances with parties.
DMDK is having its alliance only with God and the Public.
DMDK has decided to contest the elections alone and they have already started their campaign.
DMDK  has got the "Murasu" symbol as their election symbol. Supreme Court has given the judgement and informed to the Election Commission about the symbol.



How many Seats will DMDK win in this Election?

30.03.2009 At Sayalgudi
01.04.2009 at Aranthangi
03.04.2009 at Thiruvarur
05.04.2009 at Trichy Supporting the Candidate Vijayakumar

DMDK Campaign News

DMDK Captain has started his election campaign from Kanyakumari and his party is the first to start the campaign. He has satrted before he got his election symbol.
On 29th March during his campaign he commented about PMK leader Dr. Ramadoss that he will wash dhoti for 5 years and saree for 5 years, about his allaince with other parties for election seats.
On 30th March 2009 - DMDK announced their 4th list of contestants. here is the list:
  • Chennai Central - V.V.Ramakrishnan
  • Nilgiris- S. Selvaraj
  • Thiruvallur - R. Suresh
  • Kancheepuram - T. Tamilventhan
  • Coimbatore - R. Pandiyan
  • Chidambaram - Suba Sasikumar
  • Nagapattinam - Maha Muthukumar
  • Kadalur - M C Damodaran
  • Mayiladuthurai - G K Pandiyan
  • Pondicherry - K A U Asana
On 30 March 2009 - Sayalgudi - Ramnad District
Captain campaigned at Sayalgudi for the DMDK Contestant Singai Jinna and his talk goes like this..
Karunanidhi has captured the party started by Annadurai and Jayalalitha captured the party started by MGR and both are having alliances only to loot the Goverment Funds.
On 01.04.2009, he campaigned a Aranthangi, Pudukkottai Dist. He told to the public that he is contesting the elections mainly because of ladies supporters and he demanded more support from ladies. Captain also recommended that DMK's Kalaignar TV is telecasting against ADMK and Jaya TV telecasting against DMK about an hour in their channel and requested to view the show and not to support them and vote for the goodies only.
On 03.04.2009, He was canvassing in Thivarur and during his speech , both parties ruled TN and they cheating the public. DMK is the only party to offer holiday for Electricity. He also asked the ladies why they are called "Sakthi". He briefed that girls with their parents pray their god and after marriage they will worship their in-laws god, so they will have more sakthi than male.
On 05.04.2009,  supporting the candidate Vijayakumar in Trichy, Captain told that if he has been given a chance he will make the centre to do more benefits to the people of Tamil Nadu, what the earlier alliance parties failed to do.

DMDK Youth Wing Rally





Lok Sabha Elections 2009 - Results and Views

Without winning a single seat, the Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) headed by actor Vijayakanth once again played the spoiler, polling more votes than the victory margin in many constituencies. As in the 2006 Assembly elections, the party has proved that it could have made the difference between the victory and defeat for either front.

A similar trend was witnessed in the 2006 Assembly elections. The DMK and the AIADMK had direct contests in 115 constituencies and the DMK won 81 and the AIADMK 34. In 63 constituencies the DMDK’s vote share was higher than the victory margin.

Mr.Vijayakant said “elections have become a ritual in democracy since corrupt money, amassed by those who are in power and those who have been in power, is being used to buy votes.” He said the DMDK, driven by the objective of delivering the State from the corrupt regime, rejected calls for alliances and contested alone. “If the DMDK had joined either alliance, it would have become yet another political party,” he said.

DMDK Captain Vijaykanth Speech








  • Arasangam - Tamil Movie
    The movie directed by Madhesh, a one-time associate of director Shankar. Being 150th film of Vijayakanth, all efforts are being taken to come up with a grand venture. The movie would have two heroines. A...
  • Arasangam Movie Still
    Arasangam Arasangam is the 150th Movie of Tamil Actor Vijayakanth popularly known as CAPTAIN. Most of the Film has been shooted in Canada. An action-packed entertainer, the movie features Vijayakanth in the...
  • Mariyathai Movie Photo Gallery

Captain Vijayakanth -DMDK

Captain Vijayakanth -DMDK

76
rate or flag this pageTweet this

Personal

Born as Vijayaraj Naidu on August 25 1952 in Madurai, Tamil Nadu, India. His parents are K.N.Alagarswami Naidu and Aandal. He married his wife Premalatha Vijayakanth Naidu on January 31, 1990 and has two sons with her, Vijay Prabhakar Naidu and Shanmuga Pandian Naidu. He is nicknamed 'Captain', as he has starred in a popular movie called "Captain Prabhakharan". "Captain Prabhakharan" was a Blockbuster of the year 1992 & Vijayakanth's 100th film.

Recently having entered the world of Tamil politics he has tried to change the political scene of TN, which is famous for either only having the ADMK or DMK in power. HisDMDK party is remarkable for the fact that it did not align with any other party during elections.
In 2010, he has directed his first movie and titled as "Virudhagiri" and is going to be released in the busy schedule of his politicial activies. The latest news about the movie and for downloading the songs.



Political Life

In 2006, Vijaykanth Naidu started a political party DMDK (Desia Murpokku Dravidar(Naidu) Kazhagam) and contested in Tamil Nadu Elections. He won from Vridhachalam constituency which was considered a PMK stronghold. Other members of his party did not win. He was able to secure around 8% votes in his first election and in Local Election he got around 17%.





Film Career - Awards Won

* 1981 - "Thoorathu Idimuzhakkam" selected for World Film Festival in Delhi.
* 1986 - Best Actor Filmfare Award for "Amman Koyil Kizhakalae". * 1989 - Best Actor Cinema Express Award "Poonthotta Kavalkaran". * 1989 - Best Actor Award "Chindura Poove" & Film Fans Award * 2001 - Kalaimamani Award by Tamil Nadu Government. * 2001 - Best Tamil Citizen Award by Mayor of Houston U.S.A. * 2001 - Best Actor Award "Vanathai Pole" Cinema Express Award

Captain


DMDK Youth Wing Rally


Trivia

* He has acted only in Tamil language.
* Umai vizhigal is one movie which introduced many new artistes. * His Movies always have extreme stunts. * His Movies always get a great opening at the Box-Office. * Vijayakanth has nearly 3 Million Naidu members in his political party. * His movie "Vanathai Pola" collected about 250 million rupees. * His Sattam Oru Irutarai was a super hit that it was remade in Hindi Andha Kanoon starring Amitabh & Rajinikanth. * Pulan visaranai, Managara kaval & Captain Prabakaran were all Blockbusters and directed by a DFT Student R.K. Selvamani. * He acted in successful films like Vanathai Pola, Vallarasu, Captain Prabhakaran, Pulan Visaranai, Ramana, Chinna Gounder, Vaitheki Kaathirunthaal, Sathriyan, Amman Koyil Kizhakkaley and more * His "Captain Prabhakaran" movies were dubbed in Hindi, Telugu & Malayalam and took a good collection. * In Tamilnadu C centres he is one of the most popular Tamil actor. * He received 8.33% votes in first assembly election. * 17% votes in Local Election. * Party Name : "Desiya Murpokku Dravida Kazhagam" (DMDK) * Party Launch : September 14 2005 in a political conference held at Madurai * Never campaigned for a political party * His wife is the chairperson of Shri Andal Alagar Naidu College of Engineering founded by him and his brother-in-law L.K.Sudhish is the Secretary and Correspondent. * Mrs. Janaki Ramachandran Menon had given him the van used by MGR during his political campaign. * Most of his films have been dubbed in Telugu.Because his mother tongue was Teleghu. * Was introduced as Vijayaraj Naidu in his debut film 'Enikum illamai' * Has organised his followers into different cadres like students, farmers, women, advocates, doctors etc * His opposing candidate for Nadigar Sangam was Actress Devi. She received only 122 votes whereas he got 749 votes and won the election. * He wanted to defeat the Dalits Leaders in Tamilnadu. Eg:Thirumavalavan Parayan. * Has vowed to celebrate his birthday in a grand manner only after NAIDU wins in Tamilnadu. * He was the President of Naidu Sangam for three consecutive times.

Monday, December 6, 2010

dmdk wings 2010





தே.மு.தி.க., அழியாமல் இருக்க மக்கள் தான் காரணம்: விஜயகாந்த்

சென்னை : ""நான்கரை ஆண்டுகளாக, தே.மு.தி.க., அழியாமல் இருப்பதற்கு மக்கள் தான் காரணம். மக்கள் இருக்கும் வரைக்கும். நான் அழிய மாட்டேன். நான் இருக்கும் வரை மக்களை அழிக்க விட மாட்டேன்''என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள, ஐ.ஐ.சி.எம்., பல்கலைக் கழகம் சார்பில், சிறந்த சமூகசேவை புரிந்ததற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை சேத்துப்பட்டில் நடந்த விழாவில், ஐ.ஐ.சி.எம்., பல்கலைக் கழக நிர்வாகி ஜான் வில்லியம்ஸ், டாக்டர் பட்டத்தை விஜயகாந்திற்கு வழங்கினார். இதில் சென்னை ஏ.சி.ஐ.,- டையோசிஸ் தலைவர் ஜெயக்குமார், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, கேப்டன் "டிவி' நிர்வாக இயக்குனர் சுதீஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் ஏற்புரை வழங்கி விஜயகாந்த் பேசியதாவது:நீங்களே சிறுபான்மையினர், எனச் சொல்லி உங்களை சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் பெருபான்மையினர், என நிரூபிப்பதற்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளது.தி.மு.க., அரசு சிறுபான்மை மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என ஏசுநாதர் கூறினார். காரணம் எத்தனை தடவை அடித்தாலும், ஒரு நாள் கைவலிக்கும். அது போல் மக்கள் பொறுமையாகவுள்ளனர். அரசன் அன்று கொள்வான்;தெய்வம் நின்றுக்கொள்ளும்.நான் சிறுவயதிலேயே நன்மை செய்தவன்; தீமை செய்யவில்லை. கபடம் இல்லாதவன் பாக்கியசாலி என்று பைபிள் வசனம் கூறுகிறது. அதனால் நான் பாக்கியசாலி தான். இவ்வளவு பிரச்னைக்கு இடையில் எனக்கு, டாக்டர் பட்டம் கிடைத்துள்ளதற்கு தெய்வம் தான் துணை நிற்கிறது. இவ்வளவு நாட்கள் எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் இருப்பதற்காக சிலர் தடுத்தனர்.

திருச்சபையை மீறி இந்த டாக்டர் பட்டம் எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. எல்லா மதங்களும் அன்பு, பண்பு, கருணை ஆகியவற்றை போதிக்கிறது. கூடாரங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். இலவசத்தை மக்களுக்கு கொடுத்து சோம்பேறி ஆக்குகின்றனர்.ஆலமர விழுதுகளாக எனது தொண்டர்கள், பொது மக்கள் எனக்கு பலமாக உள்ளனர். நான்கரை ஆண்டுகளாக, தே.மு.தி.க., அழியாமல் இருப்பதற்கு மக்கள் தான் காரணம். மக்கள் இருக்கும் வரைக்கும். நான் அழியமாட்டேன். நான் இருக்கும் வரை மக்களை அழிக்க விடமாட்டேன். தமிழகத்தில் ஊழலை அறுத்து, தூர எறிந்துவிட்டு, நோய்வாய் பட்டிருக்கும் மக்களுக்கு நல்வாழ்க்கை கொடுப்பதற்காகவே, எனக்கு இந்த டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சியை, நான் கொடுப்பேன்; என்னால் அது முடியும். முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தம்; முடியும் என்பதே அறிவாளிகள் சொல்லும் வார்த்தை.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.


இதைப் பற்றி
கருத்துக்கள் யாவும் வரவேற்கிறோம்......................